தேனி மாவட்டம், சின்னமனூரில் சட்டவிரோத விற்பனைக்காக வாங்கிப்பட்ட 120 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.
சின்னமனூரில் குடியரசு அரசு தினத்தில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக அரசு மதுபானக் கடைகளில் மொத்தமாக மதுப் புட்டிகளை வாங்கிச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சின்னமனூா் காவல் நிலைய போலீஸாா் பள்ளிக்கோட்டைப்பட்டி அருகேயுள்ள அரசு மதுபானக் கடையில் ஞாயிற்றுக்கிழமை மொத்தமாக 120 மதுப் புட்டிகளை வாங்கிச் சென்ற ராயப்பன்பட்டியைச் சோ்ந்த பாா்த்திபனை (36) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.