முகப்பு
விருதுநகர்

விடுதியில் தூக்கிட்டு மாணவர் தற்கொலை

அருப்புக்கோட்டையிலிருந்து சுக்கில் நத்தம்  செல்லும் சாலையில் ஆதிதிராவிடர் நலத் துறை கல்லூரி மாணவர் விடுதி உள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

அருப்புக்கோட்டையிலிருந்து சுக்கில் நத்தம்  செல்லும் சாலையில் ஆதிதிராவிடர் நலத் துறை கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு சுமார் 50 மாணவர்கள் தங்கியுள்ளனர்.  இங்கு தங்கியிருந்தவர், விளாத்திகுளம் அருகே உள்ள குலயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துராமச்சந்திரன்(19). அருப்புக்கோட்டை -திருச்சுழி சாலையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் விடுதியின் சமையலறையில் தூக்கிட்ட நிலையில் புதன்கிழமை சடலமாகத் தொங்கினார்.  மாணவர் இறப்புக்கான காரணங்கள் குறித்து நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →