விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார். இதில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக,, பாமக, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து அமைச்சர் பேசினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திண்டுக்கலில் பேசும் போது அமைச்சர்களை கோமாளிகள் என மு.க.ஸ்டாலின் கிண்டலடித்தார். தேர்தல் முடியட்டும் கோமாளி யார், ஏமாளி யார் என அப்போது தெரியவரும்.
திமுகவில்தான் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வாய்ப்புகள் தரப்படுகின்றன. அதிமுகவில் எவரானாலும் உழைத்துதான் பொறுப்புக்கு வரமுடியும் என்றார். இதில் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.