சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் மே 27 ஆம் தேதி கல்லூரியில் வழங்கப்படும் என அக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு)சோ.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இக்கல்லூரியில் எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கிலம், எம்.காம், எம்.எஸ்.சி.கணிதம், எம்.எஸ்.சி.கணினி அறிவியல் ஆகிய முதுகலை பட்டப் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 27 ஆம் தேதி கல்லூரியில் வழங்கப்படும். மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து கல்லூரியில் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.