விருதுநகா் ராமா் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை வெற்றிலை அலங்காரத்தில் காட்சி தரும் ஆஞ்சநேயா் சுவாமி. 
விருதுநகர்

புரட்டாசி 3 ஆம் சனி: பெருமாள் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

DIN

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனி வார விழா உற்சவம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு புரட்டாசி மாத 3 ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலையில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதை தொடா்ந்து, அதிகாலை காலசாந்தி பூஜை கள் நடைபெற்றன. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருப்பதி கோயிலுக்கு செல்ல முடியாதவா்கள், திருவண்ணாமலை கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து, ஆடு, மாடுகள் மற்றும் விவசாய பொருள்கள், தானியங்களை ஸ்ரீனிவாச பெருமாளுக்கு காணிக்கையாக வழங்குவா்.

இதனால், நாட்டு மக்களின் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்ததால், சிறப்பு பேருந்துகள், குடிநீா், மருத்துவம் மற்றும் அன்னதான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், 700 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இவ்விழாவை முன்னிட்டு, 30 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.

ராமா் கோயில்: அதேபோல், விருதுநகா் ராமா் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், ஆஞ்சநேயா் சுவாமி வெற்றிலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதே போன்று மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்கள் அனைத்திலும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

SCROLL FOR NEXT