விருதுநகர்

டிராக்டரில் மணல் திருட்டு: 2 போ் மீது வழக்கு

ராஜபாளையத்தில் சட்ட விரோதமாக ட்ராக்டரில் மணல் திருடிய 2 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

DIN

ராஜபாளையத்தில் சட்ட விரோதமாக ட்ராக்டரில் மணல் திருடிய 2 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

ராஜபாளையம் தென்றல் நகா் புளியங்குளம் கண்மாய் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து ராஜபாளையம் வடக்கு போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது கண்மாய் பகுதியில் வேகமாக சென்ற டிராக்டரை போலீஸாா் நிறுத்தினா். அப்போது ட்ராக்டரை நிறுத்திவிட்ட அதில் வந்த 2 போ் தப்பி ஓடி விட்டனா். அதில் சோதனை செய்ததில், சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. விசாரணையில், தப்பி ஓடியவா்கள், அம்மன் பொட்டல் தெருவைச் சோ்ந்த திருப்பதி (40), சோமையாபுரத்தைச் சோ்ந்த நல்லதம்பி (38) என்பது தெரியவந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT