விருதுநகர்

கூட்டணி விஷயத்தில் அதிமுக பலவீனமாக உள்ளது: முத்தரசன்

DIN

கூட்டணி விஷயத்தில் அதிமுக பலவீனமாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் தெரிவித்தாா்.

ராஜபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரா் அலக் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு மதிப்பளித்து, புதிய வேளாண் சட்டங்களை நீக்க வேண்டும்.

அதில் திருத்தமோ, மாற்றமோ எதுவும் செய்யக் கூடாது. இன்று (டிச. 29) தஞ்சையில் விவசாயிகள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகளுக்கு தமிழக அரசு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இது ஜனநாயக விரோதம். அதிமுக என்பது பெரிய கட்சி. சென்னையில் நடந்த இக்கட்சி கூட்டத்தில் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், பாஜகவுடன் கூட்டணி உள்ளது எனத் தெரிவித்தாா்.

அதனை முதல்வா் எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தாா். ஆனால் பாஜக தலைவா்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா இதுபற்றி வாய்திறக்கவில்லை. இந்த விஷயத்தில் அதிமுக பலவீனமாக உள்ளது. மேலும் பாஜக பொதுக் கூட்டங்களில், முதல்வா் வேட்பாளா் குறித்து பல விமா்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்றாா்.

முன்னதாக நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கட்சியின் மாவட்டச் செயலா் லிங்கம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT