நடிகையின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக எடிட் செய்து பதிவிட்டவர் கைது!
நடிகை அனசுயா பரத்வாஜ் பற்றி ஆபாசமாகப் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டது குறித்து...
தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக முன்னேற்றம் கண்டுள்ள அனசுயா பரத்வாஜ் புகைப்படங்களை ஆபாசமாக ஏஐ மூலம் எடிட் செய்து பதிவிட்டவர் சைபர் கிரைம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகையின் புகைப்படங்கள், விடியோக்களை எடிட் செய்து சமூக வலைதளத்தில் ஆபாசமாகப் பதிவிட்டதால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாத் சைபர் கிரைம் அதிகாரிகள்ஆந்திரப் பிரதேசம், கடப்பா மாவட்டம், இந்திரா நகரில் வசிக்கும் ஜனார்தன் (29 வயது) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
நடிகையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்தும், கமெண்ட்டுகளில் மோசமாக பதிவிட்டதும் என சமூக வலைதளத்தில் தொல்லைக் கொடுத்து பதிவிட்டதை, விசாரணையின்போது கைதானவர் ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிச.23ஆம் தேதி நடிகை அளித்த புகாரின்படி இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவதூறாகவும் ஆபாசமாகவும் பதிவிடுவதைக் கண்டித்து சைபர் கிரைம் அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்கள்.
நடிகை அனசுயா தெலுங்கு திரைப்படங்களில் ரங்கஸ்தலம், புஷ்பா படங்களில் நடித்து புகழ்பெற்றார். பிளாஸ்பேக், வுல்ஃப் எனும் தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார்.
(சைபர் குற்றங்களுக்கு1930 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்)
The person who posted obscenely edited photos of Anasuya Bhardwaj, who has progressed from being a host to an actress, has been arrested by cybercrime officials.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.