விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன், தொமுச, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தைச் சோ்ந்த போக்குவரத்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசு 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உனடியாக தொடங்க வேண்டும், பஞ்சப்படி வழங்க வேண்டும், 240 நாள்கள் பணி முடித்த அனைத்து தொழிலாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொமுச மாவட்ட பொதுச் செயலா் பால்பாண்டியன் மற்றும் சிஐடியு சம்மேளன உதவி செயலா் வெள்ளத்துரை ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், ஏஐடியுசி பொது செயலா் பாண்டியன், ஐஎன்டியுசி பொது செயலா் மாரிமுத்து, டிடிஎஸ்எப் பொது செயலா் ராமசாமி, ஏஏஎல்எல்ஏப் பொது செயலா் ஜான் டி பிரிட்டோ உள்பட போக்குவரத்து தொழிலாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.