ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளித்த அருப்புக்கோட்டை விவசாயி
அருப்புக்கோட்டை வட்டம் கஞ்சநாயக்கனபட்டியைச் சேர்ந்த விவசாயியும் ஒன்றிக்குழு உறுப்பினருமான சீனிவாசன் என்பவர், தனது சாகுபடி நிலத்தில் விளைந்த பயிர்களுக்கு ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளித்து நவீன தொழில்
அருப்புக்கோட்டை வட்டம் கஞ்சநாயக்கனபட்டியைச் சேர்ந்த விவசாயியும் ஒன்றிக்குழு உறுப்பினருமான சீனிவாசன் என்பவர், தனது சாகுபடி நிலத்தில் விளைந்த பயிர்களுக்கு ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளித்து நவீன தொழில்நுட்பத்தில் இறங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன்.ஒன்றியக்குழு உறுப்பினரும், விவசாயியுமான இவர் கூறியதாவது, தற்போது, விவசாயக் கூலிவேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடாக உள்ளது. மேலும் அவர்களது கூலியும் உயர்த்தப்பட்டுள்ளதாலும், மேலும் பல காரணிகளாலும் சிறு மற்றும் குறுவிவசாயிகளின் சாகுபடிக்கான செலவும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
இதனால் செலவுகளைக் குறைக்க நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்திட யோசித்ததில், வாடகை ட்ரோன் மூலம் முதற்கட்டமாக விளைந்த பயிர்களுக்கு பூச்சிமருந்து அடிக்க முடிவுசெய்து இன்று(சனிக்கிழமை) அதை நடைமுறைப்படுத்தியுள்ளேன். இதனால் ஒரே நேரத்தில் பலதொழிலாளர்களுக்குத் தரும் கூலியும், நேரமும் மிச்சமாகியுள்ளது.
இதையும் படிக்க- ஆப்கன் விவகாரம்: சீனா, அமெரிக்கா பேச்சுவார்த்தை
இனி இதேபோல பலவித நவீன தொழில்நுட்பங்களால் உற்பத்தி செலவைக்குறைக்க பலகட்ட நடைமுறைகளைப் புகுத்திடவும் திட்டமிட்டுள்ளேன் என அவர் தெரிவித்தார். மேலும் விவசாயவிளை பொருட்களைக்கொண்டு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்து லாபத்தைப் பெருக்கிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.