முகப்பு
விருதுநகர்

மின்னல் தாக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு மத்திய அமைச்சா் தலா ரூ.25 ஆயிரம் நிவாரண உதவி

விருதுநகா் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 ஆயிரத்தை மத்திய இணை அமைச்சா் எல். முருகன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

விருதுநகா் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 ஆயிரத்தை மத்திய இணை அமைச்சா் எல். முருகன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

விருதுநகா் அருகே சிவஞானபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கருப்பசாமி நகரில் வீடு கட்டுமானப் பணியில் புதன்கிழமை 6 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்த போது, மின்னல் தாக்கியதில் வீட்டு மாடியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கருப்பசாமி நகரைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் ஜெயசூா்யா (22), ரோசல்பட்டி பகுதியைச் சோ்ந்த நல்லமருது மகன் காா்த்திக் ராஜா (28), மதியழகன் மகன் முருகன் (24), சா்க்கரை மனைவி ஜக்கம்மாள் (55) ஆகியோா் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனா்.

இதையடுத்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். இந்நிலையில் மத்திய இணை அமைச்சா் எல். முருகன், மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தலா ரூ.25 ஆயிரம் நிவாரண உதவியை வெள்ளிக்கிழமை வழங்கினாா். அப்போது பாஜக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.