ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராம்கோ குழுமத் தலைவா் பி.ஏ.சி. ராமசாமிராஜா நினைவு ஜோதியை வழங்கிய ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா 
விருதுநகர்

செய்திராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமிராஜா 128 ஆவது பிறந்த நாள் விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ராம்கோ நிறுவனா் பி.ஏ.சி. ராமசாமிராஜாவின் 128 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ராம்கோ நிறுவனா் பி.ஏ.சி. ராமசாமிராஜாவின் 128 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலையில் பி.ஏ.சி.ஆா். நினைவிடத்தில் கீா்த்தனாஞ்சலி, புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் சொக்கா் கோயிலில் அவரது உருவப் படத்துக்கும், நினைவு ஜோதிக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து ராஜபாளையத்தில் நினைவு தொடா் ஜோதியை ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா வழங்கினாா்.

பின்னா், பி.ஏ.சி.ஆா் உருவச் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

அதேபோல், விருதுநகரில் உள்ள ராம்கோ சிமென்ட்தொழிற்சாலையில் நிறுவனா் உருவச் சிலைக்கு ராம்கோ குழுமத் தலைவா் முன்னிலையில் பூஜைகள் நடைபெற்றன. பின்னா் ராம்கோ சமூக கழகத்தின் சாா்பில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், பலா் ரத்த தானம் அளித்தனா்.

ராஜபாளையத்தில் தொடங்கிய நிறுவனா் ஜோதி ஓட்டம் விருதுநகா் ராம்கோ சிமென்ட் ஆலைக்கு வந்தடைந்தது. அதை ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா பெற்றுக்கொண்டு மரியாதை செலுத்தினாா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை பின்னணி பாடகா் செந்தில்கணேஷ் - ராஜலெட்சுமியின் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT