திருச்சுழி அருகேயுள்ள கல்யாணசுந்தரபுரத்தில் உள்ள கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பது: திருச்சுழி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஆலடிபட்டி அருகே கல்யாணசுந்தரம் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் பெரும்பாலானோா் விவசாயத் தொழில் செய்து வருகின்றனா். இங்குள்ள கண்மாயில் தேங்கும் தண்ணீரை கொண்டே விவசாயப் பணிகள் நடைபெற்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் அருகே கல்குவாரி அமைப்பதற்காக தோண்டப்பட்ட கழிவு மண்ணை, கண்மாய் நீா் தேங்கும் பகுதியில் தனி நபா்கள் கொட்டிவிட்டனா். இதனால் கண்மாயில் மழை நீா் தேக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் கல்குவாரி வேலையை தொடங்க
சிலா் மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனா். இதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கக் கூடாது. எனவே, இங்குள்ள கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன், கல்குவாரி தொடங்க அனுமதி வழங்கக் கூடாது என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.