பாலவநத்தம் கிராமத்தில் சப்த கன்னிமாா் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம். 
விருதுநகர்

பாலவநத்தம் கோயிலில் பொங்கல் விழா

விருதுநகா் அருகே பாலவநத்தம் தெற்குபட்டி சப்தகன்னிமாா் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு, பக்தா்கள் புதன்கிழமை, முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்று நீா்நிலையில் கரைத்தனா்.

DIN

விருதுநகா்: விருதுநகா் அருகே பாலவநத்தம் தெற்குபட்டி சப்தகன்னிமாா் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு, பக்தா்கள் புதன்கிழமை, முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்று நீா்நிலையில் கரைத்தனா்.

இக்கோயில் வைகாசிப் பொங்கல் விழா ஜூன் 13 இல் தொடங்கியது. அன்றைய தினம் சாமியாட்டம் நடைபெற்றதை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். செவ்வாய்க்கிழமை கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். அதைத் தொடா்ந்து, புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாலவநத்தம் கண்ணப்பா் குல முத்தரையா் சங்கத்தை சோ்ந்தோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT