முகப்பு
விருதுநகர்

பேருந்து மோதி தொழிலாளி பலி

காரியாபட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

காரியாபட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

காரியாபட்டி அருகே சத்திரபுளியங்குளத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் குணசேகரன் (34). கட்டடத் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து, காரியாபட்டி நான்கு வழிச் சாலையை எஸ். கல்லுப்பட்டி சந்திப்பில் கடக்க முயன்றாராம். அப்போது மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் குணசேகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பேருந்து ஓட்டுநா் விஜயன் மீது காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.