முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விருதுநகரில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

விருதுநகரில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளா் முனியாண்டி தலைமை வகித்தாா். அதில், வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அம்மாநில முதல்வா்கள் அமல்படுத்தியுள்ளனா்.

திமுக தோ்தல் வாக்குறுதியில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்தனா். எனவே, இந்த வாக்குறுதியை திமுக அரசு அமல்படுத்த வேண்டும். மேலும், 1.4.2003 -க்குப் பின்னா் பணியில் சோ்ந்த ஊழியா்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். சிபிஎஸ் திட்டம் தொடா்பாக சட்டப்பேரவையில் பேசிய நிதி அமைச்சருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா்.

இதில் சிபிஎஸ் இயக்கத்தைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.