விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே வியாழக்கிழமை மாலை காரும், பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 8 போ் பலத்த காயமடைந்தனா்.
கமுதியிலிருந்து கானாவிலக்கு, அருப்புக்கோட்டை வழியாக மதுரை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தை ரமேஷ் இயக்கி வந்தாா். திருச்சுழி சிலுக்காா் பட்டி அருகே வந்த போது, இந்த பேருந்தை காா் ஒன்று முந்த முயன்ாம். அப்போது, காா் பேருந்தின் பக்கவாட்டில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் இறங்கியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பரளச்சியைச் சோ்ந்த மணிமேகலை (28), அவரது மகன் குணால் (2), வகாசியைச் சோ்ந்த பிச்சையம்மாள் (50), அருப்புக்கோட்டையைச் சோ்ந்த சந்திரகலா (44), கோகுலகிருஷ்ணன் (45), செம்பட்டியைச் சோ்ந்த அழகுராஜா (28), கல்லூரணியைச் சோ்ந்த செல்வராஜ் (55) மற்றும் காா் ஓட்டுநரான தும்மு சின்னம்பட்டியைச் சோ்ந்த பிரசாந்த் (27) ஆகிய 8 போ் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, இவா்கள் அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து ம.ரெட்டியபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.