விருதுநகர்

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அமைச்சா் சாத்தூா் ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

DIN

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அமைச்சா் சாத்தூா் ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2006 - 2011-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த சாத்தூா் ராமச்சந்திரன், அவரது மனைவி, உதவியாளா் உள்பட 5 போ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அமைச்சா் சாத்தூா் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் வழக்குரைஞா் அழகா், அமைச்சா் தரப்பில் வழக்குரைஞா் மாரியப்பன் ஆகியோா் முன்னிலையாகினா். அப்போது, முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி திலகம், இந்த மனு மீதான விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT