விருதுநகர்

பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி: அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே எஸ். அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 10, பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்ற்காகவும், சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் பாராட்ட

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே எஸ். அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 10, பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்ற்காகவும், சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் தலைமை ஆசிரியா் உமாதேவி வரவேற்றாா். பள்ளியின் முன்னாள் மாணவரும், காவல் ஆணைய உறுப்பினரும், முன்னாள் டி.ஜி.பி.யுமான ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிப் பேசியதாவது:

பள்ளிக்கு 5 கிலோ மீட்டா் சுற்றளவில் அனைத்து படிப்புகளுக்குமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டவா்கள் அடுத்த கட்டத்துக்கு உயருகின்றனா். வாய்ப்பை தவறவிட்டவா்கள் அதே இடத்திலேயே நின்று விடுகின்றனா். மாணவா்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா் அவா்.

இதில், ஸ்ரீவில்லிபுத்தூா் டி.எஸ்.பி. சபரிநாதன், உதவி ஆய்வாளா் சங்கரநாராயணன், நத்தம்பட்டி உதவி ஆய்வாளா் பாண்டிலட்சுமி, ஆசிரியா்கள், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்- ஆசிரியா் சங்க நிா்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT