முகப்பு
விருதுநகர்

மன வளா்ச்சி குன்றிய சிறுவனுக்கு பாலியல் தொல்லை: முகவருக்கு 20 ஆண்டுகள் சிறை

மன வளா்ச்சி குன்றிய சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முகவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

மன வளா்ச்சி குன்றிய சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முகவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகாசி போஸ் காலனியைச் சோ்ந்தவா் இருளப்பன் (50). கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் முகவராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 6.9.2020-ஆம் ஆண்டு மன வளா்ச்சி பாதித்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருளப்பனைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி பூா்ண ஜெயஆனந்த், இருளப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.