ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நடந்து சென்ற 2 பெண்களிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட சின்னசுரைக்காய் பட்டி தெரு, வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாடசாமி கோவில் தெரு பகுதிகளில் கடந்த மாதம் 18-ஆம் தேதி இரவு நடந்து சென்ற 2 பெண்களிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.
இது தொடா்பாக வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் கமலக்கண்ணன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.
இந்ந நிலையில் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சோ்ந்த கனகராஜ் மகன் கணேசன் ( 21) மதுரை திருவிளாம்பட்டி அழகா் கோவில் சாலையில் உள்ள அரிகிருஷ்ணன் மகன் அரவிந்தராஜ் (19) ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியை மீட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.