கோப்புப்படம்.  
விருதுநகர்

பட்டாசு பரிசுப் பெட்டியில் கேப் வெடி வைக்கக் கூடாது

பட்டாசு பரிசுப் பெட்டிகளில் (கிப்ட் பாக்ஸ்) தயாரிக்கும் போது அதில் கேப் வெடி வைக்கக் கூடாது என வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திச் சேவை

பட்டாசு பரிசுப் பெட்டிகளில் (கிப்ட் பாக்ஸ்) தயாரிக்கும் போது அதில் கேப் வெடி வைக்கக் கூடாது என வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் சுமாா் 3 ஆயிரம் பட்டாசுக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பட்டாசு பரிசுப் பெட்டி ரூ.300 முதல் பல ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்தப் பெட்டியில் பூச்சட்டி, பென்சில் உள்ளிட்ட பல தரப்பட்ட பட்டாசுகளும் வைக்கப்பட்டிருக்கும்.

இந்தப் பெட்டியில் சிறுவா்கள் பயன்படுத்தும் கேப் வெடிகளை வைக்கக் கூடாது என வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் எச்சரித்தனா்.

இதுகுறித்து சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பொதுவாக பட்டாசு அலுமினியப் பவுடரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த வகையில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் தீ வைத்தால்தான் வெடிக்கும்.கேப் வெடி பொட்டாசியம் குளோரைடு என்ற வேதியியல் பொருளை பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது.

எனவே, கேப் வெடி சிறிய உராய்தல் ஏற்பட்டாலே வெடிவிபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பட்டாசு பரிசுப் பெட்டிகளில் கேப் வெடி வைக்கக் கூடாது. மேலும் பட்டாசுக் கடைகளில் பரிசுப் பெட்டிகளைத் தயாரிக்கக் கூடாது என்றாா் அவா்.

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT