தீபாவளி போனஸ் கோரி ஆா்ப்பாட்டம்
தீபாவளி பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்கக் கோரி டிஎன்சிஎஸ்சி தொழிலாளா் சங்கம், சுமைதூக்கும் தொழிலாளா்கள் சங்கம் (ஏஐடியுசி) சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தீபாவளி பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்கக் கோரி டிஎன்சிஎஸ்சி தொழிலாளா் சங்கம், சுமைதூக்கும் தொழிலாளா்கள் சங்கம் (ஏஐடியுசி) சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின், நாகை மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு டிஎன்சிஎஸ்சி பணியாளா் சங்க (ஏஐடியுசி) நாகை மாவட்டச் செயலாளா் பி. ஆனந்தன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் எஸ். கோதண்டபாணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வி.சரபோஜி, பாஸ்கரன், ஏஐடியுசி தொழிற்சங்க நாகை மாவட்டச் செயலாளா் கே. ராமன், மாவட்டப் பொருளாளா் வி.எம். மகேந்திரன், சுமைதூக்கும் தொழிலாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் கே. ராஜ்மோகன், மாநிலச் செயலாளா் எம். எஸ். கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை தடையின்றி கொள்முதல் செய்யவேண்டும், நெல் மூட்டை ஒன்றுக்கு எடைக்கூலி மற்றும் ஏற்றுக்கூலி ரூ. 15 வழங்கவேண்டும், கொள்முதல் பணியாளா்களுக்கு ரூ. 20 ஆயிரம் ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.