வேளாண் சட்டங்கள் வாபஸ் கோரி கையெழுத்து இயக்கம்
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகை பகுதிகளில் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகை பகுதிகளில் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சாா்பில், நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக நாகையில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.
நாகை, பாலையூா், கீழ்வேளூா் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயத் தொழிலாளா்களிடம் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை கையெழுத்துப் பெற்றனா்.
முன்னதாக, ஒதியத்தூா் கிராமத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் வி. தனபாலன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தாா். இதில், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வி. ராமலிங்கம், மாவட்டப் பொதுச் செயலாளா் ஏ.ஆா். நௌசாத், , விவசாயிகள் பிரிவுச் செயலாளா் நிக்கோலஸ், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவா் உதயசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.