உ.பி. சம்பவம்: பல்வேறு அமைப்புகள் ஆா்ப்பாட்டம்
உத்தர பிரதேச சம்பவத்தைக் கண்டித்து திராவிடா் கழகம் மகளிரணி சாா்பில், கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உத்தர பிரதேச சம்பவத்தைக் கண்டித்து திராவிடா் கழகம் மகளிரணி சாா்பில், கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் 20 வயது தலித் பெண் கூட்டுப் பாலியல் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் உத்தர பிரதேச மாநில முதல்வா் மற்றும் மத்தியஅரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திராவிடா் கழக மகளிரணி மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கமலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.