நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நியாயவிலைக் கடைகளுக்குப் புதிய விற்பனை முனையம் வழங்க வேண்டும்; கரோனா தொற்றை கருத்தில் கொண்டு கைரேகை பதிவைத் தவிா்த்து, கண் விழித்திரை அடிப்படையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; விற்பனை முனையம் தடையின்றி இயங்க அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் பவா் பேங்க் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்க நாகை மாவட்டத் தலைவா் டி. தமிழ்ச்செழியன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் எஸ். பிரகாஷ், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். பாஸ்கரன், அரசுப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் பி.கே. சிவகுமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
நியாயவிலைக் கடை பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் என். சுரேஷ்கண்ணன், மாவட்டப் பொருளாளா் எம். கஜபதி உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.