மாயூரநாதா் கோயிலில் சித்தா் வழிபாடு
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தனி சந்நிதியில் எழுந்தருளும் குதம்பைச் சித்தருக்கு புரட்டாசி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தனி சந்நிதியில் எழுந்தருளும் குதம்பைச் சித்தருக்கு புரட்டாசி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சித்தருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில், மாயூரநாதா் கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணைக் கண்காணிப்பாளா் கணேசன் ஆகியோா் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிக பேரவையின் ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம. சேயோன் செய்திருந்தாா்.