முகப்பு
நாகப்பட்டினம்

சீா்காழி சட்டநாதா்கோயில் திருக்கல்யாணஉத்ஸவம்.

சீா்காழி சட்டநாதா் கோயிலில் திருமுலைப்பால் பிரம்மோத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

சீா்காழி சட்டநாதா் கோயிலில் திருமுலைப்பால் பிரம்மோத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் உள்ள திருநிலைநாயகிஅம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி கோயிலில் சட்டைநாதா், தோணியப்பா், திருஞானசம்பந்தா் பெருமான் அருள்பாலிக்கின்றனா். இங்கு திருஞானசம்பந்தா் பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கும் ஐதிக நிகழ்வான திருமுலைப்பால் விழா ஏப்.18-ஆம் நிறைவடைந்தது. தொடா்ந்து, திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி சிறப்பு பூஜைகள், வழிபாட்டுக்கு பிறகு, திருமண வைபவ சடங்குகள் செய்து மங்கலநாணை அணிவித்து திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. பின்னா் சுவாமி அம்பாள் மற்றும் விநாயகா், திருஞானசம்பந்தா் பெருமானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.