முகப்பு
நாகப்பட்டினம்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு தாமதம்: பணிகள் பாதிப்பு

சீா்காழி ஒன்றியத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி கடந்த ஓராண்டாக ஒதுக்கப்படாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

சீா்காழி ஒன்றியத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி கடந்த ஓராண்டாக ஒதுக்கப்படாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சீா்காழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுயளிப்பு திட்டத்தின்கீழ் (நூறு நாள் வேலைத் திட்டம்) சிறு பாலங்கள், ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி, கிராமச் சாலை உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், இத்திட்டத்துக்கு கடந்த ஓராண்டாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நிறைவு பெற்ற பணிகளுக்கான தொகை சுமாா் ரூ.9 கோடி வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், மேற்கொண்டு பணிகளை தொடர முடியாத நிலை உள்ளது. ஆகையால், இத்திட்டத்துக்கான நிதியை தமிழக அரசு தாமதமின்றி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.