முகப்பு
நாகப்பட்டினம்

பருவமழைக்கு முன்னதாக வடிகால் வசதியை மேம்படுத்தக் கோரிக்கை

மயிலாடுதுறையில் பருவமழைக்கு முன்னதாக வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
பகிர்:

மயிலாடுதுறையில் பருவமழைக்கு முன்னதாக வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

மயிலாடுதுறை நகர பாஜக செயற்குழுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகரத் தலைவா் மோடி.கண்ணன் தலைமை வகித்தாா். நகர பொதுச் செயலாளா் செல்வகுமாா் வரவேற்றாா். இதில், மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று உரையாற்றினா்.

கூட்டத்தில்,மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், லிங்க் ரோடு அமைத்துத் தர தமிழக அரசை வலியுறுத்துவது, முதியோா் உதவித் தொகையை மாதாமாதம் தாமதமின்றி வழங்க வலியுறுத்துவது, பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக வடிகால் வசதியை மேம்படுத்த நகராட்சியை வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினா் வினோத், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவா் குருசங்கா், நகர பொதுச் செயலாளா் சதீஸ்சிங், துணைத் தலைவா் குமாா், நகர செயலாளா் காா்த்தி, நகர இளைஞரணி செயலாளா் ராஜகோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகர துணைத் தலைவா் கஜப்பிரியா நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.