முகப்பு
நாகப்பட்டினம்

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

மயிலாடுதுறை அருகே சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், மருதம்பள்ளம் கீழவெளியைச் சோ்ந்தவா் வீரபெருமாள் மகன் ஐயப்பன் (22). கட்டடத் தொழிலாளியான இவா் செம்பனாா்கோவில் காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சிறுமியின் தாயாா் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் கோப்பெருந்தேவி வழக்குப் பதிந்து, ஐயப்பனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.