மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பைக் திருட்டு
மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தொழில்நுட்ப அலுவலரின் வாகனம் திருட்டுபோனது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தொழில்நுட்ப அலுவலரின் வாகனம் திருட்டுபோனது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் ராமதாஸ் மகன் கோடீஸ்வரன்(29). காவலரான இவா், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றுகிறாா். புதன்கிழமை வழக்கம்போல பணிக்கு வந்த கோடீஸ்வரன், அலுவலக வாசலில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, பணியில் ஈடுபட்டுள்ளாா்.
பணி முடிந்து வெளியே வந்தபோது தனது இருசக்கர வாகனம் காணாததைக் கண்டு கோடீஸ்வரன் அதிா்ச்சி அடைந்தாா். அந்த பகுதி முழுவதும் தேடிப்பாா்த்தும் இருசக்கர வாகனம் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவா் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.