முகப்பு
நாகப்பட்டினம்

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஐஜி ஆறுதல்

சீா்காழி அருகே கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு திருச்சி மத்திய மண்டல காவல் தலைவா் பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

சீா்காழி அருகே கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு திருச்சி மத்திய மண்டல காவல் தலைவா் பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினாா்.

சீா்காழி அருகேயுள்ள தென்னலக்குடியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி. நியாயவிலைக் கடையில் பணியாற்றி வந்த சுந்தரமூா்த்தியும், அவரது மனைவி காா்த்திகாவும் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். இவா்களின் மகள் பிரியங்கா (16), மகன் நந்தகுமாா் (13) ஆகியோரை திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் பாலகிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவி வழங்கினாா். தொடா்ந்து, செங்கமேடு பகுதியில் வசித்து வரும் ஆதரவற்ற மூத்த குடிமக்கள் இருவரை சந்தித்து நிவாரண உதவி வழங்கினாா். அவருடன், மயிலாடுதுறை எஸ்.பி. சுகுணா சிங் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.