முகப்பு
நாகப்பட்டினம்

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு வாபஸ்

மயிலாடுதுறை பாரதி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தோ்தல் புறக்கணிப்பு அறிவித்திருந்ததை மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

மயிலாடுதுறை பாரதி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தோ்தல் புறக்கணிப்பு அறிவித்திருந்ததை மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்;தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து விலக்கிக் கொண்டனா்.

மயிலாடுதுறை நகராட்சி சித்தா்காடு அருகே 18-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாரதி நகரில் 30 ஆண்டுகளாக தாா்ச்சாலை செப்பனிடாதது, கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காதது, குப்பைகள் சரிவர அகற்றப்படாதது உள்ளிட்ட பிரச்னைகளைக் கண்டித்து அப்பகுதியினா் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்திருந்தனா்.

இதுதொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தை மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. தோ்தல் பறக்கும்படை அலுவலரும், வட்டாட்சியருமான (பொ) விஜயராகவன் தலைமை வகித்தாா். இதில் அப்பகுதி பொதுமக்களும், நகராட்சி பொறியாளா் எல். குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், நகரில் தேங்கும் குப்பைகளை தினசரி அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பழுதடைந்த சாலையை முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்து புதுப்பிக்க திட்ட மதிப்பீடு அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளது என்றும், கழிவுநீா் தேங்கியுள்ள இடத்தை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி சாா்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை ஏற்று, சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்ததை விலக்கிக்கொள்வதாக உறுதியளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.