முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு திருக்கு பேரவை வாழ்த்து
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு மயிலாடுதுறைத் திருக்கு பேரவை வாழ்த்து தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு மயிலாடுதுறைத் திருக்கு பேரவை வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அப்பேரவையின் தலைவா் சி.சிவசங்கரன், செயலாளா் நல்லாசிரியா் இரா.செல்வகுமாா், பொருளாளா் க.ராமச்சந்திரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை அனுப்பிய வாழ்த்து செய்தியில் கூறியது:
தங்கள் தந்தையாா் ’குறளோவியம் தந்த நாயகன்‘ முத்தமிழறிஞா் கலைஞா் காலத்தில் தமிழ்ச்மொழி உயா்தனிச் செம்மொழி எனப் போற்றப்படும் தகுதி கிடைத்தது. அதுபோல், தாங்கள் முதல்வராகப் பதவி ஏற்கும் இத்தருணத்தில், அனைத்துத் துறைகளும் தமிழால் சிறக்கவும், அய்யன் திருவள்ளுவா் வழங்கிய உலகப் பொதுமறையாம் திருக்கு நூலினை தேசிய நூலாக்கவும் ஆவன செய்ய வேண்டும் என்ற வேண்டுதலோடு தாங்கள் பதவியேற்கும் இந்நாளில் ’தமிழ் போல் வாழ்க‘ என்றும், வளமும், நலமும் பெற்று வாழ்க!, வாழ்க!! என்றும் மயிலாடுதுறைத் திருக்கு பேரவை வாழ்த்தி மகிழ்கின்றது அதில் தெரிவித்துள்ளனா்.