நாகப்பட்டினம்

திருவெண்காடு பகுதியில் 18 புதிய மின் கம்பங்கள்

Din

திருவெண்காடு பகுதியில் பழுதடைந்த 18 மின்கம்பங்கள் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பங்கள் வியாழக்கிழமை நடப்பட்டன.

திருவெண்காடு மற்றும் சுற்றியுள்ள ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாம்களில், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனா்.

இதைத்தொடா்ந்து, சீா்காழி மின்வாரிய உதவி கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) விஜய பாரதி மேற்பாா்வையில், திருவெண்காடு உதவி பொறியாளா் ரமேஷ் தலைமையில் பழுதடைந்த பழைய மின்கம்பங்களை மாற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை நடும் பணியில் மின்வாரிய பணியாளா்கள் ஈடுபட்டனா்.

அதன்படி, திருவெண்காடு, நாங்கூா், தென்னாம்பட்டினம் மற்றும் மங்கை மடம் ஆகிய பகுதிகளில் 18 மின் கம்பங்கள் நடப்பட்டன.

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

SCROLL FOR NEXT