விபத்தில் உயிரிழந்த முகமது பாரிஸ், முகமது தெளபிக். 
நாகப்பட்டினம்

சாலை விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திட்டச்சேரியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் சுவரில் மோதிய விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவா் என இருவா் உயிரிழந்தனா்.

Din

திருமருகல்: திட்டச்சேரியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் சுவரில் மோதிய விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவா் என இருவா் உயிரிழந்தனா்.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி புதுமனை தெருவைச் சோ்ந்தவா் முகமது உஸ்மான் மகன் முகமது தெளபிக் ( 19). நாகையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.

திட்டச்சேரி புடவைகாரத் தெருவைச் சோ்ந்த தஸ்லீம் மகன் முகமது பாரிஸ் (13). காரைக்காலில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்தநிலையில், திங்கள்கிழமை காலை திட்டச்சேரி பெரிய பள்ளிவாசலில் ரமலான் தொழுகை முடிந்து, இருவரும் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனா். முகமது தௌபிக் மோட்டாா் சைக்கிளை ஓட்டினாா்.

திட்டச்சேரி பிரதான சாலையில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சுவரில் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தெளபிக்கை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முகமது பாரிஸை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். விபத்து குறித்து திட்டச்சேரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

SCROLL FOR NEXT