முகப்பு
காரைக்கால்

நீட் தேர்வு பயிற்சிக்கு மாணவர்கள் சேரலாம்

காரைக்காலில் நடைபெறும் நீட் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 25 பிப்ரவரி 2019, 6:31 am IST
பகிர்:

காரைக்காலில் நடைபெறும் நீட் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் ம. குப்புசாமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பை காரைக்கால் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம் :
புதுச்சேரி, காரைக்காலில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. காரைக்கால் பகுதியில் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருபாலருக்குமான பயிற்சி தற்போது நடந்துகொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக,  நீட் தேர்வு -2019 எதிர்கொள்ள புதுச்சேரி கல்வித் துறையானது தற்போது சிறப்பு வசதியை செய்துள்ளது. காரைக்கால் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் விருப்பமுள்ள மாணவர்கள், பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேற்கூறிய பள்ளிக்குச் சென்று தங்கள் நீட் நுழைவுத் தாளினை கொடுத்து, இந்த குறுகிய கால பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.