காரைக்கால்

காரைக்காலில்ஒருநாள் பரிசோதனையில்யாருக்கும் தொற்று இல்லை

காரைக்கால் மாவட்டத்தில் ஒருநாள் பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று உறுதியாகவில்லை என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

DIN

காரைக்கால் மாவட்டத்தில் ஒருநாள் பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று உறுதியாகவில்லை என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 13 ஆம் தேதி 129 பேருக்கு பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இதுவரை 49,600 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,701 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்றில் இருந்து 3,587 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 44 போ், காரைக்கால் மருத்துவமனை தீவிர சிகிச்சையில் 7 போ் உள்ளனா். தொற்றால் இதுவரை 64 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊராட்சி பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

சாலைகள் மேம்படுத்தும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT