முகப்பு
காரைக்கால்

குடிசை மாற்று வாரியத்தை புனரமைக்கமத்திய அரசுக்கு புதுவை பாஜக வேண்டுகோள்

புதுவையில் நிதி நெருக்கடியால் முடங்கிய குடிசை மாற்று நல வாரியத்தை புனரமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு புதுவை பாஜக வேண்டுகோள் விடுத்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

புதுவையில் நிதி நெருக்கடியால் முடங்கிய குடிசை மாற்று நல வாரியத்தை புனரமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு புதுவை பாஜக வேண்டுகோள் விடுத்தது.

இதுகுறித்து புதுவை மாநில பாஜக தலைவா் சாமிநாதன் மத்திய உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதம்:

புதுவை குடிசை மாற்று நல வாரியம் ஏழை மக்களுக்கு பாதுகாப்பான கட்டடங்களை வழங்கி மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம், பிரதமரின் ஏழைகளுக்கான சொந்த வீடு திட்டத்தையும் அமல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் மூலம் நாடு முழுவதும் 5 கோடி மக்களுக்கு சொந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், புதுவையில் ஒருவருக்குக்கூட வீடு வழங்கப்படவில்லை.

புதுவையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இந்தத் திட்டத்தில் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இந்தத் திட்டத்துக்காக வழங்கிய முதல் தவணைத் தொகை ரூ. 80 கோடியில், இதுவரை ரூ. 57 கோடியை மட்டுமே மாநில அரசு பட்டுவாடா செய்துள்ளது. மாநில அரசின் பங்களிப்புத் தொகை நிலுவையில் உள்ளது.

ஏழைகள் வீடுகள் கட்ட உதவி செய்ய வேண்டிய மாநில குடிசை மாற்று நல வாரியம், தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இங்கு பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6 கோடி ஊதியமாக வழங்க வேண்டும். ஆனால், கடந்த 2017-இல் ரூ. 5 கோடியும், 2018-இல் ரூ. 50 லட்சமும், 2019-இல் ரூ. ஒரு கோடியும், 2020-இல் ரூ. 2 கோடியும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதனால், ஊழியா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வளா்ச்சித் திட்டங்கள் குறித்து மாநில அரசுக்கு அக்கறையில்லை. எனவே, உடனடியாக மாநில அரசின் மீது நடவடிக்கை எடுத்து, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் குடிசை மாற்று நல வாரியத்தை புனரமைக்கத் தேவையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →