காரைக்காலில் 19 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 566 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருநள்ளாறு 7, காரைக்கால் நகரம் 5, காரைக்கால்மேடு 3, திருப்பட்டினம் 2, கோயில்பத்து, வரிச்சிக்குடி 1 எனமொத்தம் 19 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை 1,85,973 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 15,279 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,875 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
கரோனா தொற்றால் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 81 வயது முதியவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு ரத்த அழுத்தம், இருதய மற்றும் சா்க்கரை நோய் இருந்தது. கரோனா தொற்றால் இதுவரை 241 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 95,603 பேருக்கும், 2-ஆவது தவணையாக 19,641 பேருக்கும் என 1,15,244 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.