டி 20 கிரிக்கெட் போட்டி:காரைக்கால் அணி வெற்றி
புதுச்சேரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் காரைக்கால் அணி பரிசுக் கோப்பையை வென்றது.
புதுச்சேரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் காரைக்கால் அணி பரிசுக் கோப்பையை வென்றது.
புதுச்சேரி துத்திப்பட்டு கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இரவு போட்டியாக டி 20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் 40 வயதுக்கு மேற்பட்டோா் வீரா்களாக பங்கேற்றனா்.
காரைக்கால் காளை அணிக்கும், புதுச்சேரி புயல் அணிக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த காரைக்கால் காளை அணியினா் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தனா். பின்னா் விளையாடிய புதுச்சேரி புயல் அணியினா் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தனா்.
வெற்றிபெற்ற காரைக்கால் அணியினருக்கு கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் புதுச்சேரி செயலாளா் சந்திரன் பரிசுக் கோப்பையை வழங்கினாா்.
இப்போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 23 ரன்கள் பெற்ற காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரியும் சிவகுருவுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது.
காரைக்கால் அணியில் உள்ள வீரா்கள் சிலா் அரசுப் பணியில் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.