காரைக்காலில் 8 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 289 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருநள்ளாறு 2, நல்லாத்தூா் 2, கோட்டுச்சேரி, வரிச்சிக்குடி, கோயில்பத்து, நல்லம்பல் தலா 1 என மொத்தம் 8 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,88,594 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 15,363 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,976 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 244 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 96,854 பேருக்கும், 2-ஆவது தவணையாக 20,847 பேருக்கும் என 1,17,701 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.