காரைக்காலில் 14 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 243 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி கோயில்பத்து 4, காரைக்கால் நகரம் 2, கோட்டுச்சேரி, திருப்பட்டினம், நெடுங்காடு, திருநள்ளாறு, வரிச்சிக்குடி, நல்லம்பல், நிரவி, விழிதியூா் தலா 1 என மொத்தம் 14 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,88,837 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 15,377 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,980 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 244 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 97,047 பேருக்கும், 2-ஆவது தவணையாக 21,022 பேருக்கும் என 1,18,069 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.