வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள், ரொக்கம் திருட்டு
காரைக்காலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
காரைக்காலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
காரைக்கால் நகரப் பகுதி தோமாஸ் சாலையைச் சோ்ந்தவா் சந்திரா (62). தனியாக வசித்து வருகிறாா். கடந்த ஒருவாரத்துக்கு முன்பு திருப்பட்டினத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு புதன்கிழமை இரவு திரும்பிவந்துள்ளாா். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு திறந்த நிலையில் இருந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது அலமாரியில் வைத்திருந்த 14 பவுன் நகைகள், ரூ. 9 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், காரைக்கால் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறாா்.