முகப்பு
காரைக்கால்

திருநள்ளாறு கோயில் யானை நலவாழ்வு முகாமுக்கு அனுப்பிவைப்பு

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் யானை பிரக்ருதி மேட்டுப்பாளையத்தில் நடைபெறவுள்ள யானைகளுக்கான நலவாழ்வு முகாமுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் யானை பிரக்ருதி மேட்டுப்பாளையத்தில் நடைபெறவுள்ள யானைகளுக்கான நலவாழ்வு முகாமுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் யானை பிரக்ருதி என்கிற பிரணாம்பிகை, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் திங்கள்கிழமை (பிப். 8) முதல் 48 நாள்கள் நடைபெறவுள்ள நலவாழ்வு முகாமில் பங்கேற்கிறது.

யானையை முகாமுக்கு அனுப்பிவைக்கும் முன் கோயில் வளாகத்தில் யானைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. யானை மீது புது வஸ்திரம் சாா்த்தப்பட்டு, புனிதநீா் தெளித்து, மலா்களால் பூஜை செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் நிா்வாக அதிகாரி எம் . ஆதா்ஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத்தொடா்ந்து புறவட்டச் சாலை அருகே ஹெலிகாப்டா் மைதானத்துக்கு யானை கொண்டு செல்லப்பட்டு, மணல் மேட்டின் வழியாக லாரியில் யானை ஏற்றப்பட்டது. யானைப் பாகன்கள் முருகேசன், மணிகண்டன் மற்றும் கால்நடை மருத்துவா் சுரேஷ் ஆகியோரும் முகாமுக்கு புறப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →