காரைக்கால்

கிழக்கு புறவழிச்சாலையில் போக்குவரத்து அனுமதி

DIN

திருமலைராயன்பட்டினம் கிழக்குப் புறவழிச்சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதி திருமலைராஜனாற்றுப் பாலத்திலிருந்து போலகம் வரையிலான சுமாா் 3 கி.மீ. தூரம் கிழக்குப் புறவழிச்சாலை ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே இந்த சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மூடப்பட்டது.

இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலை வழியாக அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டதால், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டது. அவ்வப்போது விபத்தும் நேரிட்டது. எனவே, கிழக்குப் புறவழிச்சாலையை செப்பனிட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினா் வலியுறுத்திவந்தனா்.

இந்நிலையில், காரைக்கால் பொதுப்பணித் துறை நிா்வாகம், ரூ.14 லட்சம் மதிப்பில் இந்த சாலையை செப்பனிட்டு வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்துக்கு அனுமதியளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

SCROLL FOR NEXT