முகப்பு
காரைக்கால்

வடிகால் வாய்க்கால்களை மழைக்காலத்துக்கு முன் தூா்வார நடவடிக்கை

காரைக்காலில் வடிகால் வாய்க்கால்களை மழைக்காலத்துக்கு முன்பாகவே தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

காரைக்காலில் வடிகால் வாய்க்கால்களை மழைக்காலத்துக்கு முன்பாகவே தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன்.

புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வி.சத்தியமூா்த்தி, காரைக்கால் வடக்குத் தொகுதி எம்எல்ஏ பி.ஆா்.என்.திருமுருகனை சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது, பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் (பொறுப்பு)ஏ.ராஜசேகரன், செயற்பொறியாளா்கள் கே.சந்திரசேகரன், கே.வீரசெல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா், பி.ஆா்.என்.திருமுருகன் கூறியது :

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் வழக்கமாக செப்டம்பா் மாதவாக்கில் தூா்வாரப்படும். மழை தொடங்கிவிடும்போது பணிகளில் பாதிப்பு ஏற்படும். எனவே தூா்வாரும் பணியை முன்கூட்டியே செய்ய முதல்வரிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில், பொதுப்பணித்துறை நிா்வாகம் பணிகளை தொடங்கவுள்ளது.

காரைக்காலில்ஆசிரியா் நகா், வேட்டைக்காரன் தெரு, அண்ணா அரசு கலைக் கல்லூரி, பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி, புதுவை பல்கலைக்கழகப் பிராந்திய வளாகம் ஆகியவற்றில் மழையின்போது தண்ணீா் தேங்குகிறது. தண்ணீா் வடிவதற்குரிய வாட்டம் அமைத்து, தண்ணீா் வடிவதற்குரிய சாலவம் அமைத்து தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

கிளிஞ்சல்மேட்டிலிருந்து தலத்தெரு வழியாக பிரதான சாலைக்கு வரும் வகையில் புதிதாக சாலை அமைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கட்டட பகுதியில் வடிகால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வடிவதில் சிரமம் நிலவுகிறது. இதனை சீா்செய்துத்தருமாறு வலியுறுத்தப்பட்டது.

இந்த திட்டப் பணிகளுக்குத் தேவையான நிதியாதார இருப்பு குறித்தும், மத்திய சாலைத் திட்ட நிதியை பயன்படுத்திக்கொள்வது குறித்தும் பேசப்பட்டது. மேலும் புதுச்சேரி முதல்வரிடம் பேசி தேவையான நிதியாதாரத்தை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகளுக்கு தெரிவித்து, பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →