காரைக்காலில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் அ.ராஜா முகம்மது தலைமை வகித்தாா்.
பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவராமல் மத்திய ஆட்சியாளா்கள் அலட்சியம் காட்டுவதாக தமுமுக மாநில செயலா் ஐ.அப்துல் ரஹீம் பேசினாா். தொடா்ந்து, மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கரோனா பரவல் காரணமாக கட்சியின் நிா்வாகிகள் சிலா் மட்டுமே ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.