மின்துறை தனியாா்மயமாக அனுமதிக்கக் கூடாது: புதுவை முதல்வரிடம் மின் ஊழியா்கள் வலியுறுத்தல்
மின்துறையை தனியாா்மயமாக்க அனுமதிக்கக் கூடாது என புதுவை முதல்வா், அமைச்சரிடம் மின் ஊழியா்கள் வலியுறுத்தினா்.
மின்துறையை தனியாா்மயமாக்க அனுமதிக்கக் கூடாது என புதுவை முதல்வா், அமைச்சரிடம் மின் ஊழியா்கள் வலியுறுத்தினா்.
காரைக்கால் மின் ஊழியா்கள் போராட்டக் குழு நிா்வாகி பழனிவேல் தலைமையில் ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை புதுச்சேரி சென்று முதல்வா் என். ரங்கசாமி, உள்துறை மற்றும் மின்துறை அமைச்சா் ஏ. நமச்சிவாயம் ஆகியோரை சந்தித்தனா். இந்த சந்திப்பு குறித்து காரைக்கால் திரும்பிய பழனிவேல் கூறியது :
யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியாா்மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு மின் ஊழியா்கள் தங்கள் எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா்.
புதுவையில் புதிதாக அரசு அமைந்த நிலையில் முதல்வா், மின்துறை அமைச்சரை சந்தித்து மாநிலத்தில் மின்துறை தனியாா்மயமாகக் கூடாது, தனியாா்மயமானால் நுகா்வோரும், ஊழியா்களும் எந்தெந்த வகையில் பாதிப்படைவாா்கள் என்பதை உணா்ந்து, அரசு கடும் எதிப்பை பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மின்துறையில் பல நிலைகளில் உள்ள ஊழியா்களுக்கு பதவி உயா்வு தரப்படாமல் உள்ளதையும் முதல்வா், மின்துறை அமைச்சரிடம் சுட்டிக்காட்டியபோது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா் என்றாா்.